பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. இடம் அறிந்து கோ கொடுப்பது எப்படி (Judgement Kho) ஓடிவரும் விரட்டுபவர், ஏதாவது ஒரு கம்பத்தின் அருகில் நின்று ஏமாற்றுகிற ஒட்டக்காரரைத் தொட்டு வெளியேற்ற, தந்திரமாக இடம் அறிந்து கோ கொடுக்கும் முறையால், இதற்கு இப்படிப் பெயர் வந்தது. இந்த தந்திர முறையால், கம்பத்தினருகில் நிற்கும் ஒரு ஓட்டக்காரரை, அந்த இடத்திலிருந்து வெளியேற்றி உட்கார்ந்திருப்பவர் முன்னே வருமாறு விரட்டி விட்டால் கோ பெற்ற உட்கார்ந்திருப்பவர் உடனே எழுந்து அவரை எளிதாகத் தொட்டு வெளியேற்றிவிட முடியும். 27. ஒற்றைச் சங்கிலி ஓட்டம் என்றால் என்ன? (Single Chain method) தப்பி ஓடும் ஓட்டக்காரர். உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையில் ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பம்வரை ஓடிச் செல்கிற முறையே ஒற்றை சங்கிலி ஓட்டம் என்று பெயர் (படம் பார்க்கவும்) 28. இரட்டைச் சங்கிலி ஓட்ட முறை என்றால் என்ன? இந்தத் தந்திர ஓட்ட முறையில், ஒரு ஓட்டக்காரர் உட்கார்ந்திருக்கும் இரண்டு பேரின் பின்புறமாக ஓடி மாறி மாறிச் செல்வதுதான் இரட்டை சங்கிலி முறை என்று கூறப்படுகிறது. (படம் பார்க்கவும்) 29. திரும்பித் தப்பும் முறை என்றால் என்ன? (Turn) ஓடி வந்து விரட்டுபவர் வந்து தொட முயற்சிக்கும் பொழுது, ஒருவர் ஆடுகள பக்க எல்லைக் கோட்டுக்கு அருகே வந்து நின்று. அங்கிருந்து நழுவி, திரும்பி ஓடி தப்பும் முறை. இதற்கு அதிக வேகமும், உடனே நிற்கின்ற திறனும் வேண்டும். 40