பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஒரு ஓட் டக் கரர் எப்போது அவு ட் என் று அறிவிக்கப்படுவார்? விரட்டுகிறவரால் கையால் தொடப்படுகிற போதுதான் ஒரு ஒட்டக்காரர் அவுட் என்று அறிவிக்கப்படுவார். 19. ஆட்டத்தில் வெற்றி தோல்வி எப்படி நிர்ணயிக்கப் Ls இகிற து? விரட்டுகிற குழு ஒட்டக்காரர் ஒருவரைத் தொட்டால் 1 வெற்றி எண் கிடைக்கும். ஆட்டக் கடைசியில் அதிக வெற்றி எண்களைப் பெறுகிற குழுவ்ே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். 20. கோகோ ஆட்டம் சமநிலையாகிறபோது எப்படி §fr'ssirónio (Break a tie) - ஆட்ட இறுதியில் வெற்றி எண்கள் சமமாக இருந்தால், மேலும் ஒரு முறை ஆட்டம் ஆடவேண்டும். அதன் பிறகும் ಶ್ಗ சமநிலை வந்தால், ஒரு ஒடும் வாய்ப்பு அல்லது ஒரு விரட்டும் வாய்ப்பு தந்து, குறைந்த நேரத்தில் யார் எதிராளியை அவுட் செய்கிறாரோ அந்தக் குழுவே வெற்றி பெற்றது என்று அறிவிக்கவேண்டும். 21. ஆட்டம் முழுவதும் முடியாமல், இடையிலே நின்று போனால் என்ன செய்வது? ஏதாவது ஒரு காரணத்தினால், ஆட்டம் நடைபெறாமல் நின்று போனால், அதே வேளையில் (session) அதே இடத்தில் ஆட்டத்தைத் தொடர்ந்தால், ஆட்டத்தில் பங்கு பெற்ற அதே ஆட்டக்காரர்கள். ஆட்ட அதிகாரிகள். ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் எடுத்திருந்த அதே வெற்றி என்கள் முதலியற்றை அப்படியே கணக்கில் வைத்துக் கொண்டு. ஆடச் செய்து முடிக்கவேண்டும். அதே வேளையில் (பொ ழுதி ઍ) ஆட்டத்தை தொடர முடியாமல் போனால். புதிதாகவே ஆட்டத்தைத் தொடர வேண்டும் அதே ஆட்ட அதிகாரிகள் இந்த ஆட்டத்திற்கு இருக்கவேண்டும் என்பது கட்டாய மில்லை. 22. கோகோ ஆட்டத்திற்கு எத்தனை அதிகாரிகள் உண்டு? 1 நடுவர்; 2 துணை நடுவர்கள்; 1 நேரக் கணக்கா; 1 வெற்றி எண் கணக்கர். 23. கோகோ ஆட்டத்தின் அடிப்படைத் திறன்கள் யாவை? விரட்டுபவர்களுக்கு 1. உடனே எழுந்திருத்தல் 2. சரியாகக் 37