பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ஒவ்வொரு குழுவின் முதல் ஆட்டக்காரரிடம் பந்து ஒன்றைத் தந்திருக்க வேண்டும். விசிலுக்குப் பிறகு, பந்து வைத் திருக்கும் முதல் ஆட்டக்காரர்கள் , தங்களுக்கு அடுத் து நிற்கும் ஆட்டக்காரருக்கு தலைக்கு மேலாகப் பந்தைக் கொடுக்க, அவர்கள் வாங்கி, தமக்கு அடுத் து நிற்பவர்களுக்கு கால்களுக்குக் கீழாகத் தர, அவர்கள் வாங்கி தலைக்கு மேலாகத் தர இப்படியே ஒருவர் மேலாகவும், மற்றவர் கீழாகவும் மாற்றி தர கடைசி ஆட்டக்காரரிடம் பந்து வந்ததும், அவர் பந்தை வாங்கிக் கொண்டு, 30 அடி தூர எல்லைக் கோட்டை நோக்கி ஒடிக் கடந்து சென்று திரும்பி வந்து, குழுவின் முன்னால் நின்று, தனக்கு அடுத்தவருக்கு தலைக்கு மேலாகப் பந்தைத்தர அவர் வாங்கிக் கீழாகப் பந்தைத்தர என மாற்றி இப்படியே எல்லா ஆட்டக்காரரும் எல்லைக்கோடு வரை பந்துடன் ஒடி முடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆட வேண்டும். முதலில் ஒடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும். m i