பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புரோட்டீன், உடலை உருவாக்கும் பொருட்கள் என்று அழைக்கப்படும் புரோட்டின் சத்து உடல் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் உதவுகிறது. உழைப்பால் உருக்குலைந்து போகிற திசுக்களின் தேய்மானத்தைப் போக்கி சரி செய்கிறது. புரோட்டின் சத்து பால் முட்டை பாலாடை மீன். பீன்ஸ், பருப்பு மற்றும் கொட்டைவகைகளில் நிறைய கிடைக்கிறது. 2. கார்போஹைட்ரேட்ஸ் எனும் மாவுச்சத்தானது உடலில் சக்தியைப் பெருக்கி, வாழ்வில் செய்கிற எல்லா காரியங்களையும் வீரியத்துடன் செய்திட உதவுகிறது. கோதுமை அரிசி, சோளம் உருளைக்கிழங்கு பார்லி சர்க்கரை போன்றவற்றில் மாவுச்சத்து மிகுதியாகக் கிடைக்கிறது. 3. கொழுப்புச்சத்து உடலுக்கு வெப்பத்தையும்_சக்தியையும் அளிப்பதுடன், உணவுக்கு ருசியையும் அளித்து உதவுகிறது. தாவர எண்ணெய் வகைகள் வெண்ணெய், கிரீம் இறைச்சி, முந்திரி பாதாம் போன்ற கொட்டை வகைகளிலிருந்தும் கொழுப்புச் சத்து கிடைக்கிறது. 4. விட்டமின்கள். உயிர் வாழ உதவுகின்ற துண்மை நிறைந்த சக்திகளாகும். உறுப்புக்களை வலிமைப்படுத்தவும். வலிமைப்படுத்தும் வழிகளில் உறுதுணையாக இருந்தும் உடல் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உதவுவனவாகும். இவைகளுக்கு உடலைக் காப்பாற்றும் சக்திகள் என்பது சிறப்புப் பெயராகும். - 17. விட்டமின்கள் குறைவினால் ஏற்படும் நோய்கள் யாவை? விட்டமின் A குறைவினால் மாலைக்குருடு நோய் ஏற்படுகிறது. விட்டமின் B குறைவினால், பெரிபெரி தோல் நோய்கள். மன நோய்கள் உண்டாகின்றன. விட்டமின் C குறைவினால் ஸ்கர்வி எனும் நோய் ஏற்படுகிறது. விட்டமின் D குறைவினால் ரிக்கட்ஸ் எனும் நோய் வருகிறது. விட்டமின் E குறைவினால், மலட்டுத்தன்மை உண்டாகிறது. விட்டமின் K குறைவினால் இரத்தம் உறைதலில் காலதாமதம் ஏற்படுகிறது. 18 சூரியன் நமக்கு எவ்வாறு உதவுகிறது: உலகத்திற்கான வெப்பம், ஒளி, சக்தி முதலானவற்றை சூரியன் ■ --ெ Fo ">. A ன் இ - r + F ■ வழங்குகிறது. சூரிய ஒளியானது நோய்க்கிருமிகளை அழித்து, காற்றுப் பர்ப்பைத் தூய்மையாக்குகிறது. தோலின் மூலமாக சூரிய ஒளி கலந்து விட்டமின் D என்னும் சக்தியை விளைவிக்கிறது. அதனால், நமது முன்னே கள், காலை மாலை சூரிய வெளிச்சத்தில் விளையாடும்படி அறிவு வழங்கி யிருக்கிறார்கள். 60