பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்முறை 1. பக்கவாட்டில் கைகள் இருப்பது போல, முதலில் குப்புறப் படுக்கவும் முகவாய் (Chin) தரையில் பட படுக்கவும். 2. படுத்த பிறகு, தலையை உயர்த்தவும். 3. முழங்கால் மடிய, வளைக்கவும். இரண்டு கைகளாலும், மடிந்த கால்களைப் பற்றிப் பிடிக்கவும். 5. மார்புப் பகுதியையும், தொடைப் பகுதிகளை யு. பின்புறமாக உயர்த்தி, தரையில் வயிற்றுப் பகுதி மட்டும் இருப்பது போல் இருக்கவும். பயன்கள் கைகள், தோள்பகுதிகள், கால்கள், கணுக்கால் பகுதிகள், முதுகுத் தசைகள், கழுத்துப் பகுதி அனைத்தும் வலிமை பெறுகின்றன. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. உடல் தோரணையை செம்மையாக்குகிறது. முதுகெலும்பு, முதுகுத் தண்டின நரம்புகள், மற்றும் அதனைச் சார்ந்த தசைகளும் வலிமையடைகின்றன. - 3. ஹலாசனம் சமஸ்கிருத மொழியில் ஹல் என்றால், கலப்பை எண்பது பொருள். ஆசன முடிவில் பார்க்கிறபோது, கலப்பை போன்ற வடிவத்தை இந்த ஆசனம் தருவதால், இப்படி பெயர் பெற்றது. . . . செயல்முறை : 1. மல்லாந்து படுத்து, கால்களை சேர்த்து, உள்ளங்கைகள் தரையில் படும்படி வை. 2 முழங்கால்களை வளையாமல் கால்களை மெதுவாக உயர்த்திக் கொண்டே வந்து, தலைக்குப் பின்புறம் உள்ள தரையைத் தொடு. முன் பாதம் மட்டும் தரையைத் தொடவும். -