பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ } மென்பந்தாட்டத்தின் பந்து, மட்டைக்கு உரிய அளவு களைக் கூறுக? மெண் பந்தின் எடை 6 முதல் 63/4 அவுன்சு வரை இருக்கும். பந்தின் சுற்றளவு 12 அங்குலம் (304 மி. மீட்டர்) பந்தடிக்கும் மட்டையின் நீளம் 34 அங்குலம் விட்டம் 2 1/4 அங்குலம். - 7. ஒரு ஒட்டம (Run) என்பது எப்படி பெற முடியும்: சரியாக வீசப்பட்ட பந்தை, சரியான ஆடுகளப் பகுதிக்குள் அடித்து அனுப்பிய ஒரு ஆட்டக்காரர் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தளங்களை மிதித்து முடித்து விட்டால் அவர் ஒரு ஒட்டம் எடுத்ததாக கணக்கிடப்படும். - 8. சரியான பந்தடி (Right hit ball) என்றால் என்ன? சரியாக அடிக்கப்பட்ட பந்தானது முதல் தளம், மூன்றாம் தளம், பந்தை அடிக்க நிற்கும் தளம் இவற்றின் நேர்க்கோடு போகிற பரப்பளவுக்குள் விழுந்தால், அதுவே சரியான பந்தடி என்று கூறப்படும். - 9. தவறான பந்தடி (Foul hit ball) என்றால் என்ன? சரியாக அடிக்கப்பட்ட பந்தானது, குறிப்பிடப்பட்டிருக்கும் ஆடுகள எல்லைக்கு வெளியே போய் விழுந்தால் அது தவறான அடியாகும். 10. சரியான பந்தெறிக்கு (Pitching) உரிய விதி முறைகள் யாவை? 1. பந்து வீசுபவர், பந்தை வீசுவதற்கு முன்னதாக இரண்டு கால்களையும் பந்தெறியும் அடையாள இடத்தில் வைத்து நின்று பிறகு, ஒரு காலை முன்னே ஓரடி எடுத்துவைப்பதும் பந்தை வீசுவதும் ஒரே சமயத்தில் நிகழ்வது போல பந்தை வீச வேண்டும். 2. வீசப்படுகிற பந்தானது, பந்தை அடிப்பவரின் முழங்கால்களுக்கு மேலாகவும், தோற்பட்டைக்குக் கீழாகவும் செல்வது போல இருக்க வேண்டும். - 11. பந்தடி ஆட்டக்காரருக்குரிய விதி முறைகள் யாவை? 1. பந்தடிக்க வரும் ஆட்டக்காரர். அந்தக் குழுவிற்குரிய பந்தடிக்கும் வரிசைப்படியே (Batting order) வர வேண்டும். 2. வந்த பிறகு பந்தடித்தாட குறித்துள்ள கட்டத்திற்குள் நின்று வந்த பந்தை அடித்தாட முயலவேண்டும்.