பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகோ ஆட்டம் 1. கோகோ ஆடுகளத்தின் நீ ள அகலம் என்ன? செவ்வக வடிவமுள்ள கோகோ ஆடுகளத்தின் நீளம் 29 மீட்டர். அகலம் 16 மீட்டர். - 2. கோகோ ஆடுகளக் கம்பங்களின் அளவுகள் யாவை? நிற்கும் கம்பத்தின் உயரம் தரையிலிருந்து 120 செ.மீ. ஆகும். கம்பத்தின் சுற்றளவு 30 முதல் 34 செ.மீ. இருக்கு வேண்டும். இருக்கின்ற இரண்டு கம்பங்களின் இடைவெளி 轟 r r துரம் 23.60 மீட்டர் ஆகும். 3. மையச் சந்து (Cental Lane) என்றால் என்ன? 23.60 மீட்டர் நீளமும், 30 செ.மீ அகலமும் கொண்டது தான் மையச் சந்து என்று அழைக்கப்படுகிறது. இந்த மையச் சந்து, ஆடுகளத்தை இரண்டு பகுதியாகப் பிரித்து விடுகின்றது. 4. சதுரக் கட்டம் என்றால் என்ன? (Square) மையச் சந்துக் கோடுகளும், குறுக்குச் சந்துக் கோடுகளும் சந்திக்கும் இடத்தில் ஏற்படுகின்ற பகுதிக்கே சதுரக் கட்டம் என்று பெயர். ஒரு சதுரக் கட்டத்தின் அளவு 30 செ.மீ. இதுபோல் 8 சதுரங்கள் உண்டு. o 5. குறுக்குச் சந்து பற்றி எழுதுக: (Cross Lane) மையச்சந்துக்கோட்டை குறுக்காகக் கடந்து செல்லுகிற சந்தாக இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ஒரு குறுக்குச் சந்தின் நீளம் 16 மீட்டர் அகலம் 30 செ.மீ இவ்வாறு 8 குறுக் குச் சந்துகள் ஆடுகள த்தில் உள்ளன. 6. தொடரிடம் என்றால் என்ன? : Hobby) ஆடுகளத்தைச் சுற்றிலும் 3 மீட்டர் அளவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கே, தொடரிடம் என்று பெயர். 7. கோகோ ஆட்டம் எவ்வாறு ஆரம்பமாகிறது: நடுவர் ஒரு நாணயத்தை சுண்டிவிட அதில் கேட்டு வெற்றி பெறுகிற ஒரு குழுத்தலைவன், விரட்டுவதா. ஒடுவதா என் ஒரு வாய்ப்பைக் கேட்க ஆட்டம் ஆரம்பமாகிறது. 12