பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. மாணவர்கள் என்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். அவர்கள் ஆசிரியர்களால் வழிநடத்தப் படுகின்றார்கள்.

இவ்வாறு கல்வியானது கொள்கைத் தத்துவத்துடன் கூடிக் கலந்து பணியாற்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். அது போலவே, கல்வியின் பகுதியான உடற்கல்வியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்று பார்ப்போம்.

கொள்கைத் தத்துவமும் உடற்கல்வியும்

1. உடற்கல்வி உடலை இயக்குவதற்கும் மேலாக ஆட்படுத்துகிறது.

கொள்கைத் தத்துவமானது, உடலையும் அதே சமயத்தில் மனதையும் வளர்க்க வேண்டும் என்றே வற்புறுத்திக் கூறுகிறது. அதே பணியைத் தான் உடற்கல்வியும் அயராமல் செய்கிறது. அத்துடன், அந்தத் தத்துவம் கூறுவது போல, உடற்கல்வியின் செயல்கள் யாவும், மாணவர்கள் தங்களுக்காகவே சிந்திக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் காட்டுகிறது.

2. உடல் வலிமையும், உடல் திற செயல்களும், தனிப்பட்ட ஒரு மனிதரின் ஆளுமையை வளர்த்து விடுகின்றன.

கொள்கைத் தத்துவவாதிகள் கடுமையான உடற் பயிற்சிகளை அனுமதிக்கின்றனர். வரவேற்கின்றனர். அதன்மூலம் ஆளுமையை வளர்க்க விரும்புகின்றனர். அதையே தான் உடற்கல்வி செய்து முடிக்கிறது.

3. உடற்கல்வியும் கொள்கைகளைச் (Ideals) சுற்றியே திட்டமிட்டுப் பாடங்களைப் பயிற்றுவிக்கிறது.