பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உடற்கல்வி என்றால் என்ன?


4. ஆசிரியரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வழிகாட்டுபவராக விளங்குகிறார். அதாவது, மாணவர்களுடன் ஆசிரியர் மிகவும் நெருக்கமாக இருந்து, இணைந்து உதவுகிறார்.

5. ஆசிரியர் தான் கல்வித் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்புள்ளவராக இருக்கிறார்.

6. வாழ்க்கைக்கு கல்வியே உகந்ததாகிறது. இப்படி எல்லாவிதமான காரியங்களுக்கும், கொள்கைத் தத்துவத்திற்கும் உடற்கல்வி உதவி, வழிகாட்டி, வாழ்விக்கிறது.

2. உண்மைத் தத்துவம் : (Realism)

உண்மைத் தத்துவம்தான் முதலில் தோன்றியதாகும். ஆனால் அடுத்து வந்த கொள்கைத் தத்துவம் ஆக்கிரமித்துக்கொண்டு, உண்மைத்தத்துவத்தைப் பின்னோக்கித் தள்ளிவிட்டது.

விஞ்ஞான விதிமுறைகளின் ஆரம்பமும், உண்மைத் தத்துவத்தின் நடைமுறையும் ஒன்றுபோல் தொடங்கின அதன் தன்மையை, இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இனி, உண்மைத் தத்துவத்தின் கொள்கைகளைக் காண்போம்.

1. நாம் வாழும் உலகம் தான் உண்மையான உலகமாகும்.

இந்தத் தத்துவாதிகள், உலகத்தையும், இயற்கையையும், அப்படியே, இருப்பது போலவே ஏற்றுக்கொள்கின்றார்கள், மனிதன் செய்கிற செயற்கைப் பொருட்களைக்கொண்டு இவர்கள் திருப்தியடைவதில்லை. ‘இந்த உலகில் மனிதன் பிறந்தது. நில உலகத்தை ஜம்புலன்