பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

101


களாலும், அனுபவங்களாலும் நன்கு புரிந்து வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள்.

2. இந்த நில உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது, காரியங்கள் யாவும், இயற்கையில் அமைந்துள்ள விதிகள் (Laws)படியே நடைபெறுகின்றன.

இந்த இயற்கை விதிகள் தாம், மனிதர்களின் நில உலகத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும், காரண காரியங்கள் எல்லாவற்றிற்கும், இயற்கை தரும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளே காரணமாக அமைகின்றன. இதனை மனிதர்கள் தாங்கள் காணும் காட்சிகள் மூலமே புரிந்து கொண்டு விடுகின்றனர்.

3. உண்மைகள் யாவும் விஞ்ஞான விதி முறைப்படியே தீர்மானிக்கப்படுகின்றன.

அதாவது விஞ்ஞானமும் தத்துவமும் தான் சிறந்த உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன என்று உண்மைவாதிகள் நம்புகின்றனர்.

4. மனதும் உடலும் ஒற்றுமையுடன் செயல்படக் கூடிய வகையில் நல்ல உறவுடன் திகழ்கின்றன.

மனிதர்களின் நடத்தைகள் இயற்கை விதிகளின் படியே அமைகின்றன என்று ஒரு சிலரும் மனிதர்களின் நடத்தை அவர்கள் கற்கும் முறைகளிலிருந்து தான் உருவாகின்றன என்று வேறு சிலரும் கருதுகின்றார்கள்.

என்றாலும், மனதும் உடலும் பிரிக்க முடியாத உறவுடன் ஒன்றை ஒன்று மீறிவிடாமல், ஒரு முகமாக சிறப்பாகச் செயல்படுகின்றன என்பது தான் பொதுக் கொள்கையாக இருக்கிறது.