பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
உடற்கல்வி என்றால் என்ன?

மக்களின் சமூக ஒற்றுமை நடத்தைகளில் சிறப்பான வளர்ச்சியை அளிக்கின்றன.

6. விளையாட்டும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வாழ்க்கையை அனுசரித்துப் போகும் ஆற்றலை அளிக்கின்றன.

மாணவர்கள் உடற்கல்வி தரும் செயல்களில் ஈடுபட்டு இந்த, உண்மையான நில உலகினுடன் தொடர்பு கொண்டு, இந்த உலகின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிடுகிறார்கள் என்பதைத் தான் உடற் கல்வியின் மூலம் உண்மைத் தத்துவம் நிலைநாட்டிக் கொண்டு வருகிறது.

3. அனுபவத் தத்துவம் (Pragmatism)

அனுபவத் தத்துவம் என்பதன் கொள்கையாவது, அனுபவம் தான் வாழ்க்கையின் திறவுகோலாக இருக்கிறது என்பதாகும். இந்தத் தத்துவமானது அறிவையே அடிப்படையாகக் கொண்டு வழி காட்டுகிறது. அதனால் தான் இதை அனுபவத்தத்துவம்(Experimentalism) என்று ஆரம்ப காலத்தில் கூறினார்கள்.

1880ம் ஆண்டு வரை Pragmatism என்ற பெயர் இதற்கு வரவில்லை. இது ஒரு அமெரிக்கத் தத்துவமாகும். இதன் தத்துவக் கொள்கையை இனி காணலாம்.

1. மனிதனுடைய அனுபவங்கள் உண்மை போன்றவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமையைப் பெற்றிருக்கின்றன. அனுபவத் தத்துவத்தை ஆதரிப்பவர்கள், மாற்றங்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

அனுபவம் ஒன்றே உண்மையை அறிய உதவுகிறது. அனுபவம் இல்லாதது எதையும் அறிந்து கொள்ளவோ,