பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

109


படுத்தும் வகையில், கல்விப் பணியை முடுக்கிவிட வேண்டும்.

3. கல்வி என்பது இயற்கையாக மூளையை மட்டும் வளர்த்துவிடுவதற்காக இல்லை.
4. மாணவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்கின்றார்கள்.
5. ஆசிரியர்களும் இயற்கையில் விதிகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
6. கல்விப்பணி வளர்ச்சிக்கு ஆசிரியர் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்.

இயற்கைத் தத்துவத்தின் கொள்கை வழி கல்வி செல்வதனை மேற்காணும் கருத்துக்கள் நமக்குத் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டுகின்றன.

இனி உடற்கல்வியின் பணி, இயற்கைத் தத்துவத்துடன் எப்படி இணைந்து போகின்றன என்பதனையும் தெரிந்து கொள்வோம்.

இயற்கைத் தத்துவமும் உடற்கல்வியும்:

உடற் கல்வியின் பணிமுறைகளைத் தந்திருக்கிறோம்.

1. உடற்கல்விச் செயல்கள் யாவும் இயற்கையில் உள்ள உடலார்ந்த நிலைக்கும் மேலாக வளர்ச்சி தருகிறது.
2. சுயஇயக்கச் செயல்மூலமாக, உடற்கல்வியானது, கற்றுத் தருவதில் கெட்டிக்காரத்தனமாக கவனம் செலுத்துகிறது.
3. கல்விப்பணி தொடர்பில், விளையாட்டு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.
4. தனிப்பட்டவர்களுக்கிடையே நடை பெறுகின்ற பெரும் போட்டிகளுக்கான சந்தர்ப்