பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
உடற்கல்வி என்றால் என்ன?

5. எல்லா நிகழ்ச்சிகளுக்கும், நடை முறைகளுக்கும ஆசிரியரே வழிகாட்டியாக, ஆலோசகராக விளங்குகிறார்.

இப்படியாக உடற்கல்வி எல்லா தத்துவங்களின் கொள்கைகளையும் சிறப்பாக அரங்கேற்றும் சிங்காரமான மேடையாகத் திகழ்வதை இதுவரை நாம் அறிந்து மகிழ்ந்தோம்.

அதனால்தான், உடற்கல்வி உலகத்தின் மேன்மைமிகு கல்வியாக இருப்பதுடன், முன்னேற்றமான வாழ்க்கைக் கல்வியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது.

இதுவரை நாம் அறிந்து கொண்ட தத்துவங்கள் எல்லாம், மேனாட்டிலிருந்து கிளம்பியவைகள் ஆகும். அவைகள் நம் நாட்டு வாழ்க்கை முறைக்கு ஏற்றதா என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்த்திடவேண்டும். இந்தியநாட்டின் மரபுகள்,நம்பிக்கைகள்,கொள்கை கள், கோட்பாடுகள், தத்துவங்கள், வாழ்க்கையின் அணுகுமுறைகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை ஆகும்.

‘எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை’ என்பது இந்தியப் பண்பாட்டின் எழுச்சிமிக்க வாசகமாகும்.

உயர்ந்த சிந்தனைகள் என்பது தெளிந்த சிந்தனைகளாக, நமது முன்னோர்களால் நிலை நாட்டப்பட்டவையாகும். பிற நாட்டுத் தத்துவங்களை நாம் ஏற்றுக் கொள்வது நல்லது என்றாலும், அவை எப்படி நம் தத்துவங்களுடன் ஒத்துப் போகிறது என்பதை உணர்ந்த பிறகு, மேற்கொள்வது புத்திசாலித்தனமாகும்.