பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116
உடற்கல்வி என்றால் என்ன?

தடித்த தோல் கைகளில் இருந்த அமைப்பு முதலியவை மிருக இனத்தில் இருந்து மனித உடல் அமைப்பு உருவானபோது, மாறிக்கொண்டன. மாறாமல் இருந்த, உறுப்புக்கள் யாவும் மென்மை பெற்றன, மெருகேறின.

மனித உடலில் உணர்வுகள் மிகுந்து, சூழ்ந்து கொண்டன, முற்கால நமது முன்னோர்கள் உணவுக்காக அதிக நேரம் அலைந்து, பின்னர் பெற்று மகிழ்ந்தனர்? அவர்கள் காலம் அப்படி நீடித்தது.

மனித உருவம் பெறுவதற்கு முன்னர், மனிதக் குரங்காக(Ape) இருந்ததை டார்வின் தனது கொள்கைக்குச் சான்றாகக் காட்டினார். குரங்கிலிருந்து வளர்ந்த மனிதனுக்குக் கைகளைப் பயன்படுத்துகிற திறமையும், மூளை வளமும் மிகுதியாக வந்தது. நிமிர்ந்து நிற்கிற தோரணை, மனவளர்ச்சி, கற்றுக் கொள்ளும் ஆர்வம், அவர்களுக்குப் புதிய புதிய ஆயுதங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்த உதவின.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை டார்வின் நமக்கு தெளிவு படுத்துகிறார் இப்படி இயற்கைச் சூழ்நிலைகள்; காரியமாற்றமேற்கொண்ட உறுப்புக்களின் உபயோகங்கள், சூழ்நிலைகளை சந்திக்க மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் தந்த அறிவுகள், அனுபவங்கள், இன விருத்தி முறை, பரம்பரை வளர்ச்சி, உடல் மாற்றங்கள் எல்லாமே மனிதக் குரங்குகளிலிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டின.மனிதனை உயர்ந்தவனாக உலகத்திலே நிலை நாட்டின.

அதாவது, எல்லா உயிர்களுக்கும் இயல்பாக இருந்த நடை, ஒட்டம், மரம் ஏறுதல், தாக்குதல், தாண்டுதல் துள்ளிக்குதித்தல் போன்ற செயல்கள் மனிதர்களிடத்தில்