பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

11




“அறிவையும் உடல்வலிமையையும் வளர்த்து ஒருவரை முழு வளர்ச்சியுள்ளவராக மாற்றியமைக்கும் கல்வி முறையே வேண்டும்” என்பதைத் தான் சிந்தனையாளர்கள் தெளிவுபடுத்தினர், வற்புறுத்தினர்.

இலட்சியமும் அலட்சியமும்

ஒரு மனிதர் உடலால் வலிமையும் திறமையும் உள்ளவராக உள்ளத்தால் வலிமையும் நுண்மையும் நிறைந்தவராக உணர்வுகளில் நிதானமும், நிறைவான பண்பாற்றலும் மிக்கவராக, சமூக வாழ்வில் அயலாரோடு அனுசரித்துப் போகின்ற பக்குவம் மிகுந்தவராக விளங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் இலட்சிய நோக்காக அமைந்திருந்தது.

ஆகவே, மக்களுக்கு உடற்கல்வியின் பெருமை பற்றியும். விளக்கமாகக் கூற வேண்டும். அந்த உடற்கல்வித் திட்டங்கள் வழியே, அவர்கள் வாழ்க்கை நடைபோட வேண்டும் என்ற விழிப்புணர்வுடனும் செயல்படலாயினர்.

அந்த முறை தான் உலக மக்களை உன்னத நிலைக்கு ஏற்றுவிக்கும் என்று நம்பினர். ஆகவே, பொதுக்கல்வி முறையுடன் உடற்கல்வியையும் ஒன்றாக இணைத்து, ஒன்றாக இயக்கிடவேண்டும் என்றும் முயன்றனர்.

அதற்காக அறிஞர்கள் பலர், உலக நாடுகளுக்கு முற்காலத்தில் உடற்கல்வி உதவியநிலையினை உதாரணம் காட்டினர். உடற்கல்வியே உண்மையான வாழ்க்கைகல்வி என்பதையும் சான்றுடன் நிரூபித்தனர்.

முற்காலத்தில் மிகவும் மேன்மையுடன் வாழ்ந்த சில முக்கியமான நாடுகளின் வாழ்க்கைத் தத்துவத்தை நாம்