பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

131



நமது கட்டுப்பாட்டுக்குள்ளும், விருப்பத்திற்கும் ஏற்றவாறும் எலும்புத் தசைகள் செயல்படுகின்றன.

ஆகவே, தசைமண்டலம் முழுவதும், நமது இயக்கத்திற்குப் பெருந்துணையாகவும், உரிய ஆதாரமாகவும் விளங்குகிறது. அதனை சரியாகப் பராமரித்து வந்தால், திறமையுடன் இயங்க நாம் உதவியவர்களாகின்றோம். அப்படி நடைபெற, உடற்பயிற்சிகளும், பெருந்தசை இயக்கச் செயல்களுமே உதவுகின்றன.

விசை பெறும் தசைகள்

தசைகள் எல்லாம் மூன்று வித செல்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

1. வரியுள்ள தசைச் செல்கள்.
2. வழவழப்பான தசைச் செல்கள்.
3. இதயச் செல்கள்.

இவை மூன்றும் வெவ்வேறு விதமான செல்லமைப்புடன் உருவாகியிருக்கின்றன. அது போல; இயங்கும் முறைகளிலும் குறிப்பிட்ட வித்தியாசங்களும் உள்ளன.

தசைகள் இயங்கும்போது, நீண்டு சுருங்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. ஆனால், எலும்புத் தசைகளாக இருப்பவையே அதிகமான இயக்கங்களைப் பெறுகின்றன. ஏனென்றால், தசைகளின் இருபுற நுனிகளும் ஏதாவது ஒரு எலும்புடன் இணைக்கப்பட்டிருப்பது தான் முக்கியமான காரணமாகும்.

ஒவ்வொரு தசையிலும் நரம்பு மண்டலத்திலிருந்து வந்து முடிகிற உணர்வு நரம்புகள் இணைந்துள்ளன. அதனால் தான் தசையின் இயக்கத்தில், பிரதி செயல்