பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

உடற்கல்வி என்றால் என்ன?


வினை (Reflex) மிகவும் துரிதமாகவும் துல்லியமாகவும் ஏற்படுகிறது.

தசைகள் உறுதியாக இருக்கிற போது தான், நரம்புகளும் நல்ல வலிமையுடன் உறைகின்றன. அதனால் தான் தசைகளுக்கு விரைவாக இயங்கும் விசைச் சக்தியும் வெளிப்பட்டு வருகிறது.

நன்கு எதிர்பார்ப்புக்கு மேலாக சிறப்பாக இயங்கும் தசைகளை உருவாக்குவது தான், மனித சக்தியை மேம்படுத்த உதவும். அதையும் ஒரளவு அறிவு பூர்வமான வகைகளிலே உருவாக்கிட முயல வேண்டும்.பரபரப்புடன் பயிற்சி செய்தால் வீணான பதைபதைப்பும், தசைகளுக்குத் துன்பமும் ஏற்பட ஏதுவாகிவிடும்.

பயிற்சியளிக்கும்போது, ஒரு சில குறிப்புக்களை உணர்ந்து, எச்சரிக்கையுடன் கடைபிடித்தாக வேண்டும்.

1. தசைகள் சுருங்கி விரியும் தன்மையை நாம் பயிற்சியின் போது ஏற்படுத்துகிறோம். அப்படி சுருங்கும் தசைகள், எந்த அளவுக்கு நீண்டு செல்கிறது என்பது முக்கியமல்ல. எவ்வளவு சீக்கிரம் அவை தமது பழைய நிலைக்கு வந்து சேர்க்கின்றன என்பதை நாம் கருத்தில் கொண்டு கவனமாகச் செய்திட வேண்டும்.
2. ஒவ்வொரு தசைக்கும் சுருங்கி விரியும் அளவும், ஓய்வு பெறுகிற அளவும் உண்டு என்பதை உணர்ந்து, அதன்படி பயிற்சி அளிக்க வேண்டும்.
3. தசைகளை நன்றாக நீட்டிச் சுருக்கி விடும் போது அதனுள்ளே இரத்தம் ஆழமாகப் பாய்ந்து செழிக்க வைக்கிறது. அதனால் தசைகளில் எதிர் பார்க்கும் விசைச் சக்தி தாராளமாகப் பெருகிவிடுகிறது.

அதற்காக நாம் தசைகளை அதிகமாக இயக்க ஆரம்பித்தால், தசைகளில் உண்டாகும் வளர்ச்சிக்குப்