பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

133


பதிலாக, வளர்ச்சித் தேக்கநிலை ஏற்பட்டு விடுகிறது. திறமையுடன் இயங்கும் நிலையிலும் ஆற்றல் குறைந்து போகிறது.

ஆக, தசைகளின் விசைச் சக்தியைப் பெறுவதற்குரிய உபாய வழிகளைக் கண்டு கொள்வோம். பெருமையையும் புரிந்து கொள்வோம்.

1. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுது தான், உடலின் தோரணை (Posture) நிறைவாக இருக்கிறது. நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. தசைகளின் சக்தி குறையும்போது, தோரணை தொய்ந்து போகிறது. கூன் முதுகாகக் கோலம் கொள்கிறது. ஆகவே, தசைகளை திறமையுள்ளதாகப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மனித இனத்திற்கு அவசியமாகிறது.
2. தசைகளில் விசைச் சக்தி அதிகமாக இருக்கும் பொழுதுதான், எதிர்வினை செயல்களை (Reaction Time) விரைவாகச் செய்திடும் வல்லமை நிறைந்திருக்கிறது. சக்தியுள்ள தசைகளில் தான், விரைவான, மிக சீக்கிரமான எதிர் செயல்கள் நடந்து, காரிய மாற்றும் நுணுக்கமும் வல்லமையடைகிறது.
3. எப்பொழுதுமே சுறு சுறுப்பாக இயங்க, தசைச் செயல்களை உடற்பயிற்சிகள் தயார் செய்து விடுவதால்தான், உடலில் அப்படிப்பட்ட விரைவான இயக்கம் விளைகிறது.

ஆகவே, உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையின் வளர்ச்சிக்கும் உதவி, உர மேற்றுகிறது என்பதை உணர்ந்து, அப்படிப்பட்டப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.

தசைகளே உடல் சம நிலையையும், உடல் அமைப்பையும், உடல் தோரணையையும், செம்மைப்