பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
134
உடற்கல்வி என்றால் என்ன?

படுத்திச் சிறப்பிப்பதால், தசையின் விசைச் சக்தியைப் பெருக்கிக் கொள்ள, நாம் முயல வேண்டும்.

பாரம்பரியமும் சுற்றுப்புற சூழ்நிலையும் (Heredity And Environment)

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப் போல் அல்லது தாத்தா பாட்டிகளை அல்லது அவர்களுக்கும், முந்திய பரம்பரையினரை ஒத்தாற் போல பிறக்கின்றனர். அதாவது அவர்களுடைய தோல் நிறம், உடல் அமைப்பு, உயரம், அறிவு மற்றும் ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக் கொண்டு பிறக்கின்றனர்.

முன்னோர்களைப் போலவே இல்லாவிட்டாலும் அவர்களை ஒத்தார்போல, பலவிதமான சாயல்களுடன் பிறந்து, பல்வேறு விதங்களில் தங்கள் குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். இதை உயிரியல் பாரம்பரியம் என்பார்கள். அத்தகைய தனிப்பட்ட குணங்கள் எப்படி அமைகின்றன என்று காண்போம்.

மனிதன் ஒற்றை செல் அமைப்பிலிருந்து உருவாகிறான். ஒரு செல் முட்டையாகி, கருவாகிற அமைப்பை சைகோட் (Zygote) என்பார்கள். முந்தைய பரம்பரையின் மன, உடல், அறிவு மற்றும் சமூகப் பண்புகள் இவற்றை ஒருவன் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் விதமாக, சைகோட்டின் கூறுகள் கைக்கொண்டிருக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

ஆணின் செல்லை (Cell) ஸ்பெர்ம் அல்லது ஸ்பெர்மெட்டோஸுன் (Spermatozoon) என்பார்கள்.இது ஆண் செல், பெண் செல் என்று இரு கூறு கொண்ட தாகும். ஒரு ஸ்பெர்ம் என்பது 23 ஜோடி குரோமோ