பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உடற்கல்வி என்றால் என்ன?


ஆராய்கிற பொழுதுதான். உடற்கல்வியின் ஒப்பற்ற பெருமை நமக்குப்புரிகிறது.

குறிப்பாக பாரசீகம், கிரேக்கம், ஸ்பார்ட்டா, ஏதென்ஸ், ரோம் போன்ற நாடுகள் எந்த அளவில் உன்னதமாக வாழ்ந்தன! உயிரோட்டமான நாகரீக வாழ்க்கையுடன் கவின்மிகு கலைகளை வளர்த்து களிப்புடன் திகழ்ந்தன, உலகுக்கே வழிகாட்டி உயர்ந்தன என்பனவற்றை நாம் உணரும்போது, உடற்கல்வியின் பெருமையை அறிந்து பெருமிதம் கொள்கிறோம்.

வரலாற்றின் விளக்கம்

உடலை நன்றாக இயக்கிக் களிக்கும்போது, உள்ளமும் உவப்புடன் செழுமையும் சிந்தனைத் திறமும் பெறுகிறது, என்பதுதான், அந்நாடுகளின் தலையாய கொள்கையாக, தரமாக தத்துவமாகத் திகழ்ந்திருந்தது.

இதனால், எகிப்தியர்கள்,பாபிலோனியர்கள், ஹீப்ரு மக்கள் யாவரும் விளையாட்டில் ஈடுபட தங்கள் குடிமக்களை உற்சாகப்படுத்தினர். விளையாட்டுகளுக்கும், உடற்கல்வித் திட்டங்களுக்கும் உகந்த இடத்தைக் கொடுத்து வளர்த்தனர்.

சைப்ரஸ் எனும் புரட்சித் தலைவன், தன் பாரசிக நாட்டு மக்களை பேரெழுச்சி மிக்கவர்களாக வளர்க்க, உடற்கல்வியையே பயன்படுத்தினான்.அவர்களை கடுமை நிறைந்த வீரம் உள்ளவர்களாக கிளர்ந்தெழச் செய்தான்.

தன்நாட்டில் உள்ள ஆறு வயது சிறுவர்களைக் கூட உடற்கல்வியில் உற்சாகத்துடன் ஈடுபடவைத்து, பயிற்சியளித்தான். உடற்கல்வி முறை என்பது ஒட்டம், தாண்டுதல், வேலெறிதல், மலையேற்றம் ஏறுதல், குதிரை சவாரி