பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

141


சாதாரண பயிற்சியின்போது, பெண்ணின் உடல் உஷ்ணமடைகிற சமயத்தில் 2 லிருந்து 3 டிகிரி உஷ்ணம் சீக்கிரமாக அதிகமாகி விடுகிறது. அதுபோலவே விரைவாகக் குளிர்ந்து விடுகிறது என்பதாக பரிசோதனையில் கண்டறிந்திருக்கின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

பெண்களுக்கு முழங்கால் மூட்டு நிலையானதாக அமைந்திருக்கிறது. (Stable) ஆண்களுக்குரிய உடல் எலும்புகளானது பெண்களை விட நீளமுள்ளதாக இருக்கிறது.

பெண்களின் உடல் அமைப்பை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை முறைப்படுத்திடவேண்டும்.

2. உடல் இயக்க வேறுபாடு (Physiological Difference)

1. தசைச் சக்தி: பெண்களுக்குரிய தசைச் சக்தி, ஆண்களுக்குரியதை விட பலஹீனமானதுதான். எவ்வளவுதான் பயிற்சிகள் கொடுத்தாலும், ஆண்களுக்கு மேலாகத் தசைச் சக்தியை உண்டு பண்ணிவிட முடியாது.

ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரண பெண்ணைவிட, கை பிடிக்கும் சக்தியில் (Grip), தள்ளுகிற மற்றும் இழுக்கும் ஆற்றலில் அதிக பலம் கொண்டவனாக விளங்குகிறான். பெண்களால் கடுமையான வேலைகள் செய்ய முடியாது. அப்படித்தான் அவர்களின் உடல் அமைப்பு உள்ளது.

2. இரத்த ஓட்டம்: பெண்களுக்கு இதயத்தின் அளவு கொஞ்சம் சிறிய அமைப்புள்ளதால், உறுப்புக்களுக்கு இரத்தத்தை இறைத்து அனுப்பும்