பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
உடற்கல்வி என்றால் என்ன?

ஆற்றலில் குறைந்துதான் இருக்கிறது. அதனால், அடிக்கடி இரத்தம் இரைத்திட இதயம் முயல்வதால், பெண்களுக்கு ஆண்களை விட இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கின்றது.

3. சுவாசநிலை: பெண்களின் நுரையீரல் மற்றும சுவாச வழிகள் ஆண்களைவிட சிறிய அளவினதாக இருப்பதால், சுவாசமானது, கடுமையான பயிற்சிகளை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். தேவையான காற்றுக்குரிய திறமையான சுவாசநிலை போதிய அளவு கிடைக்காததால், கடுமையான பயிற்சி முறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

4. மாதவிடாய்: இந்த மாதவிடாய் காலம், ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 5 நாட்கள் வரை வந்து நீடிக்கும். இந்த மாதவிடாய் காலத்தில், ஓரிடத்தில் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது சமுதாய மரபு. மருத்துவர்களின் ஆலோசனையும் அப்படித்தான்.

ஆனால், மாதவிடாய் இருந்த வீராங்கனைகள் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு கொண்டதுடன், பல சாதனைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்று சரித்திரம் சான்று பகிர்கிறது.

என்றாலும், இந்த நேரத்தில் கடுமையான பயிற்சிகளை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், என்றாலும் பெண்களுக்கான போட்டிகளை அவர்கள் மாதவிடாய் காலம் பார்த்து வைக்க முடியாதே பந்தயங்களில் பங்கு பெறுகிற பெண்களில் 7 ல் ஒருவர் மாதவிடாய் பிரச்சினைக்கு உள்ளாகிறார் என்ற ஒர் ஆய்வுக் குறிப்பு உரைக்கிறது.ஆக, அவரவர் விருப்பப்படியே தான் இந்தப் பிரச்சினையை விட வேண்டியிருக்கிறது.