பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
144
உடற்கல்வி என்றால் என்ன?நிகழ்ச்சி ஆண்கள் சாதனை பெண்கள் சாதனை
உயரம் தாண்டல் 2.43 மீட்டர் 2.9 மீட்டர்
நீளம் தாண்டல் 8.90 மீட்டர் 6.34 மீட்டர்
வேலெறிதல் 104.80 மீட்டர் 78.90 மீட்டர்
தட்டெறிதல் 74.08 மீட்டர் 74.56 மீட்டர்
100 மீட்டர் ஓட்டம் 9.83 நொடி 10.76 நொடி

ஆண் பெண் உடலமைப்பில் உள்ள ஆற்றல் விகிதம் பற்றி அறிந்து கொள்ளும் நேரத்தில், அவர்களின் உடல் அமைப்பைப் பற்றியும் விதம் (Type) பற்றியும் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.

உடல் பிரிவுகள் (Body Types)

மனித உடலின் நுண்மையை ஆராய்ந்த அறிஞர்கள் அவை மூன்று வகைப்படும் என்று அறிவித்தார்கள்.

உடலியலில் அறிஞர்களும், தத்துவஞானிகளும் கூட இந்த மேன்மைமிகு முயற்சியில் ஈடுபட்டு, உடலைப் பிரித்து வைத்து, அத்தகையோர்களின் குணநலன்கள், மன வளங்கள் முதலியவற்றையும் விளக்கமாக விவரித்து வைத்தார்கள்.

சில சமயங்களில் அவர்கள் கூறிய முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. ஆனால், அவற்றை விஞ்ஞானபூர்வமாகவே விளக்க வேண்டியும் இருந்தது.

இந்த அறிவியல் முறைப்படி ஆய்வு செய்த திசை நோக்கி முதலில் நடந்தவர் கிரெஸ்ட்ச்மெர் (Krestchmer) என்பவர். அவரைப் பின்பற்றி உடல் பிரிவுகளின் வகைகளைக் கூறியவர் ஷெல்டன் (Sheldon).

அவர்கள் இருவரும் பிரித்த விதம் ஒன்று போல இருந்தாலும், பெயர்களில் தான் வித்தியாசம் இருக்