பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

உடற்கல்வி என்றால் என்ன?



உறுப்புக்கள் நீளமாகவும், கனமானதாகவும் இருக்கும். தசைகளும் பெரிதாகவும், அதன் நார்களின் அளவுகள் பெரிதாகவும் இருக்கும்.

பெரிய தடித்த கழுத்தும், பானை போன்ற பெருவயிறும், நீண்ட குடற்பகுதிகள், நீண்ட கைவிரல்கள், அகலமான கைப்பகுதிகளும் கொண்டவர்களாக இப்பிரிவினர் இருப்பார்கள்.

தடித்த தோலும் அடர்த்தியற்ற தலை முடியும், உடல் முழுவதும் கொழுப்பும் தசைகளும் சேர்ந்த தசைத் திரள்களும், அதே சமயத்தில் அவைகள் உறுதியுள்ளதாகவும், இருக்கும். உருண்டையான தலை அமைப்பும், அகலமான முக விசாலமும் சதுர வடிவான தாடையும், சிறியதாக உட்புறம் அமைந்த குவிந்த கண்களுமாக இப்பிரிவினர் காட்சியளிப்பார்கள்.

சிறந்த ஜீரண சக்தி இவர்களுக்குண்டு, எந்தவிதமான கடினமான உணவு வகைகளையும் போதுமான அளவுக்கு ஜீரணம் செய்கின்ற வல்லமை படைத்த ஜீரண மண்டல அமைப்பு இருப்பதால், தேவைக்கு மேலே உடல் சக்தி கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்.

சமூக அமைப்பில், மற்றவர்களுடன் கலந்துறவாடுவதில் மகிழ்ச்சியும், அவர்களிடையே சொற்பொழிவாற்றுவதில் சுகமான இன்பமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இவர்கள் செயல்திறன் வேடிக்கையானது. முதலில் ஒரு காரியத்தை செய்துவிட்டு, பிறகு அதைப் பற்றி சிந்திக்கும் இயல்புள்ளவர்கள் இவர்கள். தங்கள் திறமைகளில் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாலும் வாழ்க்கை