பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
147
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

யில் தங்கள் இலட்சியம் பற்றிய நினைவுகளில் அவ்வளவாக எழுச்சியற்ற மனதுடனேயே வாழ்வைக் கழிப்பார்கள்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காணப்படுகின்ற இப்பிரிவு மக்கள், எப்பொழுதும் ஒரு வேலையில் நிலைத்து இருக்க மாட்டார்கள். பட்டாம் பூச்சி பறப்பது போல இவர்கள் அன்றாட செயல்களின் தன்மைகள் நிறைந்து இருக்கும்.

குண்டாகவும் குள்ளமாகவும் கூட இவர்கள் விளங்குவார்கள். இவர்களை வெளி உலக சிந்தனையாளர்கள் (Extrovert) என்றும் அழைப்பார்கள். அதாவது இவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உள்ளாற்றல்கள் பற்றியும் சிந்திக்காமல், தங்களைச் சுற்றியுள்ள வெளியுலகைப் பற்றியே சிந்திக்கும் இயல்புள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

விளையாட்டுக்களில் இவர்கள் ஈடுபடும் பொழுது, வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளிலேயே பங்கு பெறும் இயல்புள்ளவர்கள். எறியாளர்களாக (Throwers) பலர் இருப்பார்கள். சில சமயங்களில் விரைவோட்டக் காரர்களாகவும் இப்பிரிவினர் அமைந்து விடுவதும் உண்டு.

2. குறு உடல் அமைப்பு (Asthenics or Ectomorph)

குறு என்றால் குள்ளமான அல்லது குறுகிய என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த உடல் பிரிவைச் சார்ந்தவர்கள் குள்ளமாக, அதே நேரத்தில் ஒல்லியானவர்களாகவும் அல்லது உயரமாகவும் ஒல்லியானவர்களுமான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.