பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
150
உடற்கல்வி என்றால் என்ன?

பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வத்துடன் பங்கு பெறுவார்கள். ஒட்டக்காரர்களில் பலர் இப்பிரிவினராக இருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

3. சீருடல் அமைப்பு: (Athletic, Mesomorph)

சீர் என்றால் அளவானது, ஒழுங்கானது, சிறப்பானது என்ற நாம் பொருள் கொள்ளலாம்.

இந்த சீருடல் அமைப்பு முன்னர் நாம் விளக்கியுள்ள இரண்டு உடலமைப்புகளுக்கும் இடைப்பட்ட பிரிவாக அமைந்திருக்கிறது.

பரந்து விரிந்த தோள்கள்; குறுகிய இடை அமைப்பு; இடுப்புக்கு மேற்புறமான மார்புப்பகுதி முதல் தலைவரை நல்ல அகலமும் திண்மையும் கொண்ட சிறப்பு சீரான வளர்ச்சி பெற்ற தசைகளின் பொலிவு, இவர்களை ஹெர்குலிஸ் பரம்பரை என்று பிறர் போற்றும் வண்ணம் உடலமைப்பு இருக்கும்.

இவரது தொண்டைப் பகுதி வட்ட வடிவம் கொண்டதாக, வயிற்றின் மேற்புறமும் உருண்டை வடிவானதாக, அழகான அமைப்பினைக் கொண்டிருக்கும். வலிமையான கழுத்தும், அதன் மேல் தோரணையுடன் வீற்றிருக்கும் தசையோ செம்மாந்தும் அடர்ந்திருக்கும்.

நல்ல வடிவமைப்புடன், அழகுக் கவர்ச்சியுடன் முக அமைப்பு இருக்கும். அதாவது ஒவல் (Oval) வடிவத்தில் உறுதியான தாடையுடன் அமைந்திருக்கும்.

உறுதியான முதுகுத்தண்டு, அதன் லம்பார் பகுதியில் மெலிதான வளைவு, மிக நேர்த்தியாக அமைந்திருக்கும்.அவர்களின் தோல் அமைப்பானது நேர்த்தியாக