பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

155



உடலை அதிகமாகப் பயன்படுத்தும் செயலால், வளர்ச்சியின் வேகம் தடைப்பட்டுப் போகும். உயிர்க் காற்றின் அளவு குறைந்து மூச்சடைப்பு நிலை ஏற்படும், உடல் சமநிலை இழந்து போகும். சரியான உடல் வளர்ச்சிக்குன்றி, சரிவு நிலை உண்டாகும்.உடலமைப்பும், உளவியல் செழிப்பும் சேதமடைந்துபோகின்றன.

ஆகவே, பக்குவமாக, பதமாக, உடலின் நிலை பார்த்து, நிதானமாக, நெறியோடு பயன்படுத்தும் பணியை, திட்டமிட்ட அறிவியல் கலந்த உடற்பயிற்சி முறைகள் செய்கின்றன. ஆகவே, உடற்பயிற்சிகளை உண்மையோடு பயன்படுத்தி,நல்ல பயன்களைப் பெற நாம் முயல வேண்டும்.

உறுப்புக்களின் சீரும் செயற்கூறும்

உடலின் சீரான இயக்கம் அதன் தசைகளில் தான் இருக்கின்றன. இரண்டு இரண்டாக இணைந்துள்ள தசைகள், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்து விட்டுக்கொடுத்து, சிறப்பாக செயல்படுகின்றன. இதை (Reciprocal Innervation) என்று கூறுவார்கள்.

இப்படி செயல்படும்போது உறுப்பின் ஒரு பிரிவுத் தசைகள் சுருங்க, மற்ற பிரிவுத் தசைகள் அதனுடன் எதிர்த்து செயல்பட இப்படித்தான் தசைகள் இயங்குகின்றன. இந்த அமைப்புதான் எளிதான, இனிதான இயக்கத்தை ஏற்படுத்தித் தருகின்றது.

இழுக்கும் தசைகளை (Agonists) என்றும், எதிர்க்கும் தசைகளை (Antagonists) என்றும் கூறுவார்கள்.

இப்படிப்பட்டதசைகள் எலும்புகளுடன் இணையப் பெற்று, எலும்புத் தசைகள் (Skeletal Muscles) என்று பெயர்