பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
157
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வரும்போது, திறமைகளில் ஈடுபடும் தசைகள் கற்றுக் கொண்டு, கணக்காகக் காரியமாற்றுகின்றன. அந்த இணக்கமான இயக்கங்கள் பிறகு எளிதாக வந்து விடுகின்றன.

எவ்வளவு இயக்கலாம்?

தசைத் திரள்களை நாம் முன்னே விளக்கியவாறு இணக்கம் பெறத்தக்க அளவிலும் இயக்கிக்கொள்ளலாம். செயல்படலாம். ஆனால், தசைகளை நீட்டிப்பதற்கும், சுருக்கவும், விரிவாக்குவதற்கும் ஒர் அளவு உண்டு. எல்லையும் உண்டு.

எல்லைக்கும் மேலாக விரிவாக்கினால், செயலே துன்பமாகி விடும். தசைகளுக்கு காயம் அல்லது சுளுக்கு அல்லது பிடிப்பு ஏற்பட்டு விடும்.

தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஆணையிடுகின்ற காரியத்தை மூளை மேற்கொண்டிருக்கிறது. மூளை கொடுக்கிற கட்டளையானது மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத் தசைகளுக்குச் சென்று மீள்கிறது. கட்டளையை தசைகள் ஏற்றுக் கொண்டு செயல்படுகிற வேகத்தை, தசைகள் நல்ல நிலையில் இருப்பதைக் கொண்டே நிர்ணயிக்க முடியும்.

மூளையின் கட்டளை வேகமானதாக இருந்தால், தசைகளும் வேகமாக செயல்படவேண்டியிருக்கும். சக்திக்கு மீறிய செயல்களைத் தசைகள் செய்யும் போது, அப்படி செய்ய வேண்டும் என்பதால், மூளையும் அதிகப்படுத்தப்பட்டுப் போகிறது. ஆகவே, தசைகளை இயக்கும்போது, குறிப்பிட்ட எல்லையை மீறாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும்.