பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உடற்கல்வி என்றால் என்ன?


விளங்கி வந்தது என்று வரலாறு கூறுகிறது. ஆனால், பெண்களுக்கு உடற்கல்வி அவ்வளவு கட்டாயமாக இருக்கவில்லை.

வலிவும் நலிவும்

கிரேக்க நாட்டை வென்று கீழ்ப்படுத்திய ரோம் சாம்ராஜ்யம், உலக அளவில் உயர்ந்த வெற்றி நாடாகவே விளங்கியது. ரோம் மக்கள் உடற்கல்வியை உண்மையாக ஏற்றுப் போற்றிய காலம் வரைதான், அவர்கள் அற்புதமான புகழேணியில் ஏறிச் சென்றனர். ஆண்மைமிகு வெற்றிகளைப் பெற்று, அவனி புகழ வாழ்ந்தனர்.

இரத்தம் சிந்தும் போட்டிகளைப் பார்த்துப்பார்த்து சந்தோஷப்பட ஆரம்பித்த ரோம் நாட்டினர், சுகத்தால் உடல் சோர்ந்து சோம்பேறிகளாக மாறியபோது, உடலை வெறுத்து, உடற்பயிற்சியை மறுத்து,நலியத் தொடங்கிய போது, அவர்கள் காட்டுமிராண்டிக் கூட்டமான டியூடானிக் மரபினரிடையே தோற்று அடிமையாயினர்.

ரோம் சாம்ராஜ்யத்தின் பீடும் பெருமையும் சரிந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து போனது.

கலைகள் காவியங்களில் ரசனையற்ற டியூடானிக் காட்டுமிராண்டிகள் ஆண்ட காலத்தையே இருண்ட காலம் என்று வரலாறு விவரித்துச் செல்கிறது.

இருண்டகாலத்திலும் அதற்குப் பின் சில காலமும், உடலை வெறுத்து துறவுக்கலை நாட்டில் நிறைய வளர ஆரம்பித்ததன் காரணமாக, உடற்கல்வி முழுமையாக மக்களால் வெறுக்கப்பட்டது.

ஆங்காங்கே ஆர்வமுள்ள மக்கள் சிலர், உடலை மதிக்கும் மாண்பினைப் பெற்றிருந்தனர். சில நாடுகளில்