பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாஉடற்பயிற்சியானது மனிதனுக்கு மனிதன், வயதுக்கு வயது, செய்கிற தொழிலுக்கு ஏற்ப வித்தியாசப்படுகிறது.

சிறு குழந்தைகளுக்கு அந்த வயதில், வேறு எந்த வாழ்க்கைப் பிரச்சினைகளும் இல்லையென்பதாலும், அவர்களுக்கு விளையாட்டுதான் மகிழ்ச்சி, அதுவே வாழ்க்கை என்பதாலும், குழந்தைகளை வேண்டிய அளவு விளையாடச் செய்வோம். அவர்களுக்கு நல்ல அனுபவங்களையும், உறுப்புக்களின் ஒருங்கிணைந்த தேர்ச்சிமிக்க செயல்களையும், விளையாட்டு அளிக்கும் என்பதால், அவர்களை நிறைய விளையாடச் செய்யலாம்.

இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்கிறபோது, வயது, உணவு வசதி, சூழ்நிலை, செய்யும் வேலை இப்படிப் பார்த்துப் பயிற்சிகளை ஆளுக்கேற்ற பயிற்சிகளை அளிக்க, திட்டமிட்டுத் தர வேண்டும்.

முதியவர்களுக்கு உடற்பயிற்சி என்கிறபோது வலிமை குறைந்த வேகமில்லாத சாதாரண பயிற்சிகளைத் தரலாம். யோகாசனம், எளிமையாக இயக்கும் பயிற்சிகள், தொடர்ந்து உதவி வருகிற சுவாசப் பயிற்சி முறைகள் போன்றவற்றை வயதானவர்களுக்குக் கொடுக்கலாம்.

இப்படிப்பட்ட பயிற்சிமுறைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்ச்சியையும் முதியவர்களுக்கு வழங்கும். அதுவே அவர்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழச் செய்துவிடும்.

உடற்பயிற்சிகள் உண்டாக்கும் நன்மைகள்

கடுமையான உடற்பயிற்சிகள் என்பது உடலின் வலிமையை வளர்க்கவும், அதனுள்ளே மறைந்து கிடக்கும்