பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
161
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கிறது. விரைவாக இயற்கையான நிலைக்கு வந்து விடும் வல்லமையை இதயத்திற்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் வளர்த்து விடுகிறது.

4. உடலில் தோன்றுகிற லேக்டிக் ஆசிட் (Lactic Acid) என்னும் கழிவுப் பொருள் உண்டாகிற வேகத்தைக் கட்டுப்படுத்தி விடுவதன் மூலம், சீக்கிரம் களைப்படைகின்ற நிலையைத் தடுத்து விடுகிறது உடற்பயிற்சி, அதாவது, அதிக நேரம் உழைத்தாலும், அதி சீக்கிரம் களைத்துப் போகா வண்ணம் காத்து நிற்கிறது.

5. உடற்பயிற்சியானது இரத்த நாளங்களை வலிவுப் படுத்துவதுடன், விரிவுப்படுத்திக் கொண்டும் இருப்பதால், இரத்த அழுத்தம் (Blood pressure) ஏற்படாத வண்ணம் செய்து விடுகிறது.

6. எலும்புகள் வலிமையடைகின்றன. எலும்புகளின் மூட்டு பகுதியில் உள்ள எலும்புச் சோறு (Marrow) செழுமை அடைகிறது. அங்கிருந்து தோன்றுகிற லட்சக்கணக்கான சிவப்பு இரத்த அணுக்களின் தோற்றமோ வலிமையுடன் இருக் கின்றன. எண்ணிக்கையில் மிகுந்து, வலிமைக்குள் வாழும் அவைகள், இரத்தத்தை மேன்மைப்படுத்துகின்றன.

7. உடலைக் காத்துக் கிடக்கும் வெள்ளை இரத்த அணுக்கள், தசைகளின் விசைச் சக்தி வளர்ச்சியால், அதிக எண்ணிக்கையைப் பெறுகின்றன.

8. சுவாசத்தின் தன்மை சுமுகமடைகின்றது. பெறுகிற பிராண வாயுவின் அளவு பெருகி நிற்கின்றது.

ஒரு நாளைக்கு நாம் இழுக்கிற காற்றின் அளவு 3000 கேலன்கள் ஆகும். ஒரு வாரத்திற்கு அதன்