பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

உடற்கல்வி என்றால் என்ன?


அளவு 21,000 கேலன்கள் ஆகும். அதையே ஓராண்டுக்கு என்பதாக்க் கணக்கிட்டால், 1.15 மில்லியன் கேலன்கள் ஆகின்றன. உடற்பயிற்சி செய்பவர்களின் நுரையீரல்கள் இன்னும் வலிமை பெற்று, நிறைய காற்றைப் பெற்றுக் கொள்கின்றன.

9. அடிக்கடி சுவாசமிழுத்து உறுப்புக்களை நோகடிக்காமல், ஆழ்ந்த மூச்சிழுத்தலைச் செய்யத் தூண்டி, சுவாச எண்ணிக்கையைக் குறைத்து, வலிமைப்படுத்துகிறது. சுவாசத்தில் சிக்கனமான முயற்சி, அதிகமான கொள்ளளவு கூடுகிறது.

10. உடல் முழுவதற்கும் இரத்தம் பாய்ந்தோடி எல்லா செல்களும் செழித்தோங்க உடற் பயிற்சி உந்துதலை அளிக்கிறது.

11. உடலின் தசைகள், தசைநார்கள், இணைக்கும் திசுக்கள், எல்லாம் வலிமையடைகின்றன. கனமான வடிவமும் பெறுகின்றன. தசைகளும் பெருக்கம் கொள்கின்றன. தோலும் சுருக்கம் நீங்கி, பளபளப்பான நிறத்தைப் பெறுகிறது.

12. தசைகளுக்குள்ளே ஏற்படுகிற இரசாயண மாற்றங்கள், பாஸ்பரஸ் சக்திகளைப் பெருக்கி, கிளைகோஜனை அதிகப்படுத்தி, நைட்ரஜனல்லாத பொருட்களைக் கொண்டு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தன்மையை வலிமைப்படுத்துகிறது. அதனால், தசைகள் இயக்கத்தில் தடைபடா செயல் வேகமும், திறமைகளும் பெருகி விடுகின்றன.

13. தசைகளில் இணைந்து கிடக்கும் உணர்வு நரம்புகள் பரபரப்புடன் பயணங்களை மேற்கொண்டு தருகின்ற கட்டளைகள் காரணமாக, தசைகளின் இயக்கத்தில் விரைவும் நிறைவும் மிகுதிப்பட, உடல்