பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

173


 உண்டு பண்ணக் கூடாது. அந்தந்தக் குழுவினர் அந்தந்த நிலையினருடன் போட்டி போடுவது அதிக உற்சாகத்தை அளிக்கும். அல்லது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணி, விளையாட்டையே வெறுக்கின்ற நிலைக்கு ஆளாக்கிவிடும்.

4. எந்தப் பயிற்சிகளையும் கொஞ்சங் கொஞ்சமாகக் கற்பிக்க வேண்டும். திடீரென்று அதிகமாக்கி விட்டால் அதனால் பல பிரச்சினைகள் பிறந்துவிடும்.

5. எந்தப் பயிற்சிக்கும் உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை முன்னதாகக் கொடுத்து, உடலை சூடாக்கி, அதன் பிறகே அடுத்த பயிற்சி முறைகளுக்குள்ளே செல்ல வேண்டும்.

6. விளையாட்டு என்றால் வேகம் உண்டு. வெறியும் உண்டு. அதனால் விபத்துக்களும் உண்டு. வெற்றிக்காக விளையாடுவது புத்திசாலித்தனமாகும். விபத்தில்லாமல் விளையாடி வெளியே வருவது மேதைத்தனமாகும்.

ஆகவே, உயிரியல் கருத்துக்களை உணர்ந்து கொண்டு, அவற்றின் வழி ஆண்மையும் ஆரோக்கியம் மிகுந்த தேகத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆனந்தமான வாழ்வு வாழ்ந்திட முயல்வோம். அதுவே அறிவின் ஆராதனையாகும்.

~