பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

உடற்கல்வி என்றால் என்ன?


 வந்தார். இந்தப் பெயரை பலமுறை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனாலும், உள்ளம் (Soul) என்ற சொல்லை உணர்த்த முடியவில்லை என்பதற்காக, ஒரு பெயர் மாற்றம் அளித்தனர். அதற்கு மனம் (Mind) என்று பெயர் சூட்டினர். உளவியல் என்பது மனதைப் பற்றி அறிய என்று அவர்கள் கூறினார்கள். இருந்தாலும், முன்பு வந்த இடர்ப்பாடுதான் இப்பொழுதும் தலை தூக்கிநின்றது.

மனம் என்றால் என்ன? அது மூளையைப் போலவே, இதயத்தைப் போல ஒர் உறுப்பா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.மனம் என்பது, நரம்புமண்டலத்தின் மூலமாக விளைகிற முனைப்பில், நடைபெறுகிற நடத்தைக்குரியது என்பதுதான் உண்மையான விளக்கம். ஆகவே, மனம் என்பதும் விளக்கத்திற்குரியதாக அமையவில்லை.

மனம் என்றால் என்ன?

1596ஆம் ஆண்டு முதல், 1650ஆம் ஆண்டு வரை வாழ்ந்த டெஸ்கார்ட்டிஸ் என்பவர் மனதைப் பற்றிக் கூறும்போது, மனச் சான்று அல்லது மன உணர்வு (Consciousness) என்று விளக்கியுள்ளார்.ஆனாலும், முன்பு இருந்த விளக்க முடியாத நிலைதான் இங்கு எழுந்தது.மன விழிப்புணர்ச்சி (awareness) என்பதை எப்படி வெளிக் காட்ட முடியும் வடிவமற்றது இது. இது உள்ளார்ந்த உணர்வு என்பது தானே தவிர, உருவம் இல்லையே! எனவே இக்கருத்தும் ஆட்சேபத்திற்குள்ளானது.

விழித்திருக்கும்போது ஏற்படுகின்ற மன உணர்வுகள், உறங்கும் போதும் தொடர்கின்றனவே! மனம் அல்லது மூளையின் உயிர்ப்புகள், உறக்க நிலையிலும் தொடர்