பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

உடற்கல்வி என்றால் என்ன?




உடலும் மனமும்

சமீபகாலம் வரையில், ‘உடலும் மனமும் தனித் தனியாகவே இயங்குகின்றன; ஒன்றுக்கொன்று உறவோ இணக்கமோ கிடையாது’ என்றே எல்லோரும் எண்ணி வந்தனர். ஆனால், அது அப்படி இல்லை என்று அண்மைக் காலத்தில் தத்துவ ஞானிகள் தெளிவுபடுத்தினர்.

மனித உடலானது, உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஒன்றாக உருவாக்கப்படுகிறது.உடல் என்பது வெறும் நரம்பாலும், எலும்புகளாலும், தசைகளாலும் மட்டும் ஆக்கப்பட்டதல்ல. அதன் உள்ளே உள்ள மனம் சிந்திக்க, தெளிவாகத் தெரிந்து கொள்ள. விளக்கம் பெற, அதன்படி செயல்பட போன்ற தன்மைகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

மனமும் உடலும் இரண்டறக் கலந்து, இணைக்கப் பெற்ற ஓர் உன்னதமான அமைப்பாகும். ஒப்பற்ற படைப்பாகும்.

நாம் ஒரு மனிதரது நடத்தையைப் பற்றி அறிய விரும்பும் போது, உட்புறமாய் அமைவன (Internal) வெளிப்புற செயல்களாய் அமைவன (External) என்று நாம் பகுத்துப் பிரித்துக் கொள்ளலாம்.

இணைந்த செயல்பாடுகள்

ஒரு மனிதரது செயல்பாடுகள் எப்படி அமைகின்றது என்று பார்ப்போம்.ஒருவன் ஒரு பொருளைப் பற்றி அறிய விழையும்போது ஐம்புலன்களும் அவனுக்கு உதவு கின்றன. புலன்களால் பார்த்து முடிந்ததால் தொட்டு அல்லது செவிமடுத்ததை, தனது மன உறுப்புகளால்