பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

179


ஆய்ந்து, அதற்கான சுற்றுப்புறச் சூழலைத் தெளிவுறத் தெரிந்துகொண்டு அதற்கு செயல்படத் தொடங்குகிறான். அந்தச் செயலை செய்திட எலும்புத் தசைகள், நிலைமைக்கு ஏற்றாற்போல் நெகிழ்ந்துகொள்கின்றன.

அதனால், வெளிப்புற நடப்புக்கேற்றவாறு, மனதிலே உள்ளுணர்வு செயல்பாடுகள் நடந்தேறி, அதன் விளைவாக வெளிப்புற நடத்தைகளை மேற்கொள்ள உடல் இயங்கி சமாளிக்கின்றது.

ஆகவே, மனநிலை சரியாக இல்லாவிடில், உடலில் உண்டாகும் செயல்களும் நடத்தைகளும் பாதிக்கப்படுகின்றன.உடல்நிலை பாதிக்கப்படும்போது, மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையைத்தான் உடல் மன ஒற்றுமை அல்லது மனிதருக்குரிய ஒற்றுமை என்று கூறுகிறோம் (Psycho Physics).

இதனையே வில்லியம்ஸ் என்பவர், ‘முழுமையான மனிதன்’ என்பதாக விளக்குகிறார். உடல் இல்லாவிடில் மனம் என்பதே இல்லை. மனம் உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, மனம், உள்ளம் (ஆத்மா) உடல் ஆகிய மூன்றும் முழு மனிதனை உருவாக்கி விடுகிறது.

கருத்துக்கள் பல

மனம் உடல் இரண்டும் தனித்தனிதான் என்று பலரது கருத்துக்கள் இருந்தன. ஆனால் அவை ஒன்று தான். பிணைப்பு மிகுந்தது. பிரித்திட முடியாதது என்பதாகவே பலர் கருதினார்கள். தெளிவுபடக் கூறினார்கள்.