பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

உடற்கல்வி என்றால் என்ன?இயக்கத்தின் மூலமாகவே கற்பது நடைபெறுகிறது. கற்பத்தின் மூலமாக இயக்கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது சீரான சிறப்பு இயக்கங்களின் (Motor Activity) ஒருங்கிணைந்த முறைகளாகும். ஒரிடத்தில் உட்கார்ந்து கொண்டு எண்ணுகிற நினைவுகள் இயக்கமாகாது. அந்த எண்ணங்கள் தசைகளையும் இயக்காது. அது மனதில் இருக்குமே தவிர செயல்வடிவம் பெறாததாகும்.

நடத்தையும் சூழ்நிலையும் (Behavior and Environment)

உலகத்தில் உலாவருகின்ற உயிரினங்கள் நன்கு இயங்க, இரண்டு சக்திகள் இருந்து ஊக்குவிக்கின்றன. ஒன்று - பரம்பரை குணம், மற்றொன்று சுற்றுப்புறச் சூழ்நிலை.

பாரம்பரிய குணம் (Heredity) என்பது, கற்றுத் தராமலே வருகின்ற பண்பாகும். அது உள்ளுக்குள்ளிருந்தே ஊறி வருகின்ற நடத்தைகளாகவும் அமைகின்றன. சில சமயங்களில், மாறாத, மாறிப்போகாத, மாற முடியாத நடத்தைகளாகவும் அவை ஆழமாக ஊறிப் போய் விடுகின்றன.

சுற்றுப்புறச் சூழ்நிலையால் சேர்கிற நடத்தைகள். கற்றுக் கொள்வதால் நேர்வனவாகவும், அத்தகைய நிறை நலன்கன் நிலையாக இருந்து விடாமல், வாழும் இடங்களுக்கேற்ப நிலைமாறிக் கொள்வனவாகவும் அமையும்.

ஆகவே, ஒவ்வொரு மனிதனும் உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறான்.