பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

183


அவன் வாழ்க்கை இந்த இரண்டு சக்திகளால் தான் அலைக்கழிக்கப்படுவதாக விளங்குகிறது.

குழந்தை பருவத்தில் உள்ள இயற்கை பாரம்பரிய குணாதிசயங்கள், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் வளர வளர, அந்த சூழ்நிலைக்கேற்ப இயற்கைக் குணங்கள் மாற்றம் பெறுகின்றன. ஏற்றம் பெறுகின்றன. மாற்றியமைத்துக் கொள்ளப்படுகின்றன. சமுதாய நிலைக்கேற்ப நடத்தைகள் அமைக்கப்படுகின்றன.

தூண்டல்களும் இயக்கமும் (Stimulus and Response)

பிறப்பிலேயே வருகின்ற குணங்களும் நடத்தைகளும் மாறாத பண்புடையவை என்று நாம் அறிவோம். பிறப்போடு வருகின்ற உடலுறுப்புக்களும், ஏற்படுகின்ற எதிர்துண்டல்களுக்கு இசைந்து கொடுத்து இயக்குகின்ற ஒரே மாதிரியான சக்தியை பெற்றுக்கொள்கின்றன. அவை உடல் சார்ந்த, ஒத்துழைப்புள்ள இயக்கமாகின்றன.

அதாவது உட்கொள்கின்ற உணவை ஜீரணித்தல், உள்ளே வெளிப்படும் கழிவுப் பொருட்களை விரைந்து வெளியேற்றுதல், உள்ளே இழுக்கும் உயிர்க்காற்றை நெறிப்படுத்துதல்.இரத்த ஒட்டம் போன்றவை இயற்கையாக நடைபெறுவதென்றாலும், அவை இயல்பான தூண்டல்களுக்கு ஏற்ற எதிர்ச்செயல் இயக்கமாகவே அமைகின்றன.

அதற்கு முன் நாம் எதிர்ச்சொல் (Reflex) என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பிறப்பிலிருந்தே பெறுகிற தூண்டல்களுக்கு ஏற்றாற் போல், இசைந்து கொடுத்து இயங்கக் கற்றுக் கொண்டிருக்கிற உள்ளுறுப்புக்கள், அவ்வாறே பழகிப் பக்குவ