பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

உடற்கல்வி என்றால் என்ன?


மடைந்து கொள்கிற பாங்குதான் எதிர்ச் செயல்திறனாக வளர்ந்து கொள்கிறது. அந்த எதிர்ச்சொல் ஒரு குறிப்பிட்ட அமைப்போடு, இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்துபோகிறது.

G.A. மில்லர் என்பவர் எதிர்ச்செயலை இவ்வாறு விளக்கிக்காட்டுகிறார். ‘எதிர்ச்செயல் என்பது தானாக இயங்குவது. எந்தக் கட்டுப்பாட்டிற்கும் இணங்காதது. இப்படித்தான் இயங்கும் என்ற நிலையான நியதியை யுடையது; தூண்டல்கள் ஒன்றாக இருந்தாலும் அல்லது பலவாக அமைந்தாலும், ஏற்படுகின்ற எதிர்ச்செயல். நினைவுகளால் பிறப்பிக்கப்படாமல், தீடீரென்று ஏற்படுவது, அதாவது முன் கூட்டியே அமைந்திருக்கின்ற நிலையான எதிர்ச்செயல்களில் ஒன்றாக விளைந்து வெளிவருகிறது.அப்படி ஏற்படுகின்ற எதிர்ச்செயலானது, சுற்றுப்புறச் சூழலுக்கு இணக்கமாக நடைபெறுவதுடன், எதிர்ச் செயல்களுக்கு இலக்காகிற உள்ளுறுப்புக்களையும் பத்திரமாகப் பாதுகாக்கின்ற முறைகளையும் விளைவிக்கிறது’.

இதனை இன்னும் தெளிவாக விளக்கவேண்டு மென்றால், உள்ளுறுப்புக்களிலே ஏற்படுகின்ற இத்தகைய எதிர்ச்செயல் என்பது, மூளையால் தரப்படுகின்ற கட்டளைகள் அல்ல. முதுகுத்தண்டு (Spinalcord) உண்டாக்குகிற உத்திரவுகளாகும் என்று நாம் அறியலாம்.

இவ்வாறு ஏற்படுகின்ற எதிர்ச் செயல்கள் இரண்டு வகைப்படும். கட்டளைக்கிணங்க ஏற்படும் எதிர்ச் செயல்கள். கட்டளைக்கு ஆட்படாத, தானியங்கியாக வருகிற எதிர்ச் செயல்கள் ஆகும்.