பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
185
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாதானியங்கு எதிர்ச் செயல்கள் (Unconditioned Reflex Actions). இப்படிப்பட்ட தானாக விளைகிற எதிர்ச் செயல்களுக்கு என்று பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகள் பற்றி சற்று விவரமாகப் புரிந்து கொள்வோம்.

1. தானியங்கு எதிர்ச் செயல்கள், பிறப்பிலேயே உருவாகின்றன. உடலுறுப்புக்களோடு ஒன்றிப்போய், நடத்தைகளாக வெளியாகின்றன.

2. அவைகள் விரைவாக, உடனுக்குடன் வெளிப்படுகின்றன. அதே சமயத்தில், குறிப்பிட்ட அமைப்புடன், தெளிவான தன்மையுடனே அவை நடைபெறுகின்றன.

3. முன் கூட்டிய சிந்தனை எதுவும் செய்யாமலேயே தானாகவே அந்த செயல்கள், ஊக்கிகளுக்கு ஏற்ப தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

4. இந்த எதிர்ச் செயல்கள் ஒரே அமைப்பும், தெளிவான தன்மையும், விரைவாகவும், உள்ள தன்மைகள் கொண்டனவாகவே அமைந்திருக்கும்.

5. அவைகள் தன்னிச்சையானது, தன்னினைவு இல்லாமல், தாராளமாக உடனடியாக நடைபெறுவதாகும்.

6. எதிர்செயல்கள் எல்லாம் உறுப்புக்களின் விரைவான வெளிப்பாடாகவே விளங்கியிருப்பதும், அவைகள் பாரம்பரியக் குணாதிசயங்கள் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

7. யாரும் கற்றுத் தராமலேயே, தானாகவே அவைகள் நடைபெறும் சிறப்புப் பெற்றனவாகும்.

8. சிறிதும் தாமதம் இல்லாமல், உடனடியாக செயல்படும் தன்மையுடன், எப்பொழுதும் வெளிப்படும் பண்பாடுகளாகும்.