பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. கல்வி என்றால் என்ன?

(Education)

கல்வி - ஒரு விளக்கம்

கற்றுக் கொள்வதைக் கல்வி என்றும், அறிந்து தெளிவதை அறிவு என்றும் இயற்கையிலே எழுந்து பெருகி வரும் அறிவை ஞானம் என்றும் கூறுவார்கள்.

கல்வி என்பதை கல்+வி என்று நாம் பிரிக்கலாம். கல்வி என்று நாம் கூறும்போது கல்வி என்று ஏகாரம் கொடுத்துத்தான் நாம் அழைக்கிறோம்.

அப்படி அழைப்பதுதான் நியாயமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்கும் அர்த்தமுள்ள ஒரு காரணம் அமைந்திருக்கிறது.

வீ என்றால் மலரின் முதிர்ந்த, விளைந்த பருவத்தைக் குறிப்பார்கள்.அதாவது மலரின் பல பருவங்கள் மொட்டு, அரும்பு, போது, மலர், வீ என்பனவாகும்.

செடி கொடியில் முட்டிக் கொண்டு முதலில் தோன்றுவதை மொட்டு என்றும் கண்ணுக்குத் தெரிந்து