பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

191


இணைந்ததாக நடைபெற வேண்டுமானால், ஆசிரிய மாணவர்களிடையே சிறந்த ஒற்றுமை, ஒன்றுட்ட நோக்கம் அமைந்திட வேண்டும். இந்த எழுச்சி எப்படி ஏற்படவேண்டும் என்பதற்கான, ஆய்வுகள் பல அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தார்ன்டைக் (Thorndike) எனும் உளவியலறிஞர். இவரது வாழ்க்கைக் காலம் 1874 முதல் 1949 வரை. இவர் தன் வாழ்நாளில், நாய்கள், குரங்குகள், மீன்கள் போன்ற விலங்கினத்தில் பல ஆய்வுகளை நிகழ்த்திப் பார்த்தார். அத்தகைய ஆய்வுகள், கற்பதில் உள்ள ரகசியத்தை வெளிப்படுத்தித்தந்தன.

அவரது ஆய்வுகள் விலங்கினத்தில் இருந்தாலும், அவையே மனித இனத்திற்கும் பொருந்துகிற மகாத்மியத்தைப் பெற்றிருந்தது. அவற்றை, அறிஞர்கள் பலரும் உளமாற ஏற்றுக்கொண்டனர். அத்தகைய கருத்துக்களம் நமது உடல் கல்வித்துறைகளுக்கும் சாலப்பொருந்துவனவாக அமைந்திருக்கின்றன. நாமும் அவற்றை உடற் கல்விக் கற்றலுடன் இணைத்துக் கொண்டால், நமது வரிகளில் வேகமும், முறைகளில் நுணுக்கமும் பெருகும்.

அத்தகைய கற்றல் விதிகள் பற்றியும் சிறிது விளக்கமாக புரிந்து கொள்வோம்.

1. ‘ஆயத்த நிலை விதி’ (The law of Readiness)

எதையும் ஏற்றுக்கெள்ளத் தயாராக இருப்பதற்குத் தான் ஆயத்த நிலை என்று சொல்லுகிறோம்.

தயாராக இருக்க வேண்டும். அதுவும் தேவையாக இருக்க வேண்டும். அதையும் ஏற்கின்ற பக்குவமும் இருக்கவேண்டும். இந்த இதமான நிலையில்தான் கற்க முடியும். கற்றதை நினைவில் கொள்ள முடியும்.