பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
192
உடற்கல்வி என்றால் என்ன?உடலாலும் மனதாலும் ஒரு குழந்தை கற்றுக் கெள்ளத் தயாராக இருக்கவில்லை என்றால், என்னதான் முயற்சித்தாலும், அந்தக் குழந்தையால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மாறாக, எரிச்சல் ஏற்படும். திருப்தியற்ற, வெறுப்பும், வேதனையும், மந்தமான வரவேற்புமே கிடைக்கும்.

ஆகவே, குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு முன்னதாகவே, அவர்களுக்குக் கற்றுக் கொள்கின்ற மனோ நிலையை ஊட்டி விடவேண்டும். அப்பொழுது கற்றுக் கொள்ளுதல் எளிதாகிறது. இனிதாகிறது. திருப்தியும் தருகிறது.

அதனால்தான், தான்டைக் என்பவர் ‘ஆயத்த நிலையானது ஆர்வத்தை ஊட்டுகிறது. ஆனந்தத்தைக் கூட்டுகிறது. மனநிலையையும் விரிவுபடுத்திக் காத்திருக்கிறது’ என்பதாகக் கூறுகிறார். ஆகவே, ஆயத்த நிலை என்பது கற்கத் தயார் நிலையில் உள்ளதைத் தெளிவு படுத்துகிறது.கற்றுக்கொள்பவருக்கு அதுவே விருப்பமான சிறப்பு நிலையாகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் இந்தக் குறிப்பை நன்கு கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் பொழுதுதான் கற்றுத் தரவேண்டும். கற்றுத்தரும் அந்த செயலைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா, அந்த செயலை அவர்களால் செய்ய முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்த பிறகே கற்பிக்க வேண்டும்.

ஒரு வயதுக் குழந்தையிடம் பேனாவைக் கொடுத்து எழுதச் சொன்னால் எப்படி அதனால் முடியாதோ, அது