பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

197



3. பயிற்சி விதி (The law of Exercise)

இந்த விதி தருகிற விளக்கமாவது: பயிற்சிகள் தான் ஒரு செயலைப் பக்குவப்படுத்தி, செம்மைப்படுத்துகின்றன. பயிற்சிகள் என்பது, தொடர்ந்து, விடாமல் முறையோடு செய்து வருகின்ற முறைகளாக அமைகின்றன.

இப்படிச் செய்கிற பயிற்சி முறைகளை விளக்கும் விதியானது, இரண்டு பிரிவாகப் பிரிகிறது. 1. பயன் படுத்தும் விதி. (Law of use) 2. பயன்படாத விதி (Law of Disuse)

ஒரு தூண்டுதலுக்கும் அதன் தொடர்பான செயலுக்கும் அடிக்கடி தொடர்பும் செய்கைகளும் பயிற்சிகளும் தொடரும் போது தான், செயலில் செம்மையும் செழுமையும் விளைகின்றன. அதாவது நரம்பு செயல்களை உண்டாக்கும் நரம்பு மண்டலம், ஒரே செயல்களை செய்ய வைக்கும்போது செப்பம் ஏற்பட்டு, செழித்தோங்கி நிற்கிறது. நடனம், சைக்கிள் ஒட்டுதல், டைப் அடித்தல் போன்ற செயல்கள் யாவும், தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் தனித்திறன் பெறுவதற்குரிய சான்றுகளாகும்.

தூண்டலுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாமல், செயல்கள் தடைபட்டுப் போனாலும், விடுபட்டுப் போனாலும்,மேற்கொள்கிற செயலில் தெளிவு இருக்காது. தேர்ச்சி இருக்காது. திறன் நுணுக்கம் பெருகாது. இதில் திறமையும் விளையாது.

அதனால்தான் தார்ன்டைக் என்ற உளநூல் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார். தியரியும் (Theory) பயிற்சியும்