பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

201




குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிற பொழுது, இயற்கையான முறையில், காட்சி அமைப்புகளுடன் பாடத்தை நடத்துகிறபோது, அவரது போதனை வெற்றியடைகிறது. கேட்பவர்களும் எளிதாகப் புரிந்து கொள்கின்றனர்.

அதுபோலவே, விளையாட்டுக்களிலும் கடினமான திறன்களைக் கற்றுத் தருவதற்கு முன்பாக எளிய திறன்களை இயல்பாகக் கற்றுக் கொள்வதுபோல் கற்றுத் தந்தால், சிரமமான திறன்களும் சீக்கிரம் வந்து விடும்.

உதாரணத்திற்கு நீளம் தாண்டல் நிகழ்ச்சி. இதில் வேகமாக ஓடிவருதல், காலூன்றி உதைத்து மேலே எழும்புதல், காற்றில் நடத்தல், கால்களை நீட்டிக் கொண்டே மணலில் கால் பதித்தல் போன்ற பல திறன்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ளும்போது, அந்தத் திறன்கள் அற்புதமாக வளர்ந்து கொள்கின்றன.

7. தொடர்ந்து தூண்டிவிடும் விதி (Law of Intensity of Stimulus)

துண்டல்களின் வலிமையும், தொடர்ந்து தூண்டிவிடும் காரியங்களே, ஆழ்ந்து கற்பதற்கு அரும் உதவிகளை ஆற்றுகின்றன. தூண்டல்கள் வலிமையாகவும், வற்புறுத்தல் மிகுந்ததாகவும் விளங்கும்போது, ஏற்படுகின்ற எதிர்வினை செயல்களும் வலிமையானதாகவும், கட்டாய மானதாகவும் ஏற்பட்டு விடுகின்றன.

உதாரணமாக, தேசிய அளவிலான ஒரு போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பினைப் பெறுகின்ற ஒரு விளையாட்டு வீரர், தன் சக்திக்கு மேலாக பயிற்சிகளைச் செய்ய முயற்சிக்கிறார். திறன்களை சிறப்பாகக் கற்றுக்