பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
208
உடற்கல்வி என்றால் என்ன?

 பூகோளம், அதன் தரைப்படத்தின் மூலமாக, சரித்திரச் சான்றுகளுக்கு உதவுகிறது. அதுபோலவே கூட்டல் என்பது பெருக்கலுக்கு உதவுகிறது. எண்ணிக்கைகளில் கூட்டுகிற அமைப்பின் முடிவே, பெருக்கும் போது வருவதால் இரண்டுதம் பொதுக் குறிப்புக் கொள்கையாகிப் போவதை நாம், பார்க்கலாம்.

இந்தக் கொள்கை மூலமாக ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம். பல மில்லியன் கணக்கில் உண்டாகும் குறிப்பிட்ட எதிர் செயல்களுக்கு ஏற்ப, ஒவ்வொன்றும் சிறப்பான இணைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எல்லாம் பொதுவானதாக இருந்து, பலசூழ்நிலைகளில் பல்வேறு விதமாக மாறி உதவி புரிந்து வருகின்றன. என்பதே இதன் அவசிய சிறப்பாகும்.

3. அறிவின் இரு பகுதிக் கொள்கை (Two Factor Theory)

பல ஆய்வுகள் செய்த பின்னர், இந்தக் கொள்கையை உருவாக்கித் தந்தவர் ஸ்பியர்மேன் என்பவர். இவரது கருத்துப்படி, அறிவானது இரு பகுதியாகப் பிரிந்து செயல்படுகிறது.பொது அறிவு (Generalintelligence). சிறப்பு அறிவு என்பதாகும்.

இந்த இரண்டு அறிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே விளங்குகின்றன. அதாவது ஒரு செயலுக்கும் மற்றொரு செயலுக்கும் இடையே இவ்விரு அறிவுப் பகுதிகளும் வேறுபட்டே நிற்கின்றன. அதிலும், குறிப்பாக, சிறப்புப் பகுதி என்பது வேறுபட்ட செயல் களுக்கிடையே மாறுபட்டுத்தான் இருக்கிறது.

ஆனால், பொது அறிவுப் பகுதி, எல்லாவற்றிற்கும் பொதுத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. உதாரண