பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

209


மாக, பூகோளம், சரித்திரம், இலக்கியம், விஞ்ஞானம் என்பதெல்லாம் பொது அறிவின் தன்மையில் இயங்குகிறது.

இசை, கலை, ஒவியம், நீச்சல் போன்றவை எல்லாம் சிறப்பு அறிவுப் பகுதியின் சிறப்புப் பகுதியாக சித்தரிக்கப் படுகின்றன.

உடற்கல்வி ஆசிரியர்கள்

இந்த அடிப்படையில்தான், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டுத்திறன்களை வளர்க்கும்விதம் முறைகளையும் உத்திகளையும் வகுத்தாக வேண்டும்.

உடற்கல்வி என்பது ஒடுதல், தாண்டுதல், எறிதல், ஏறுதல், இறங்குதல் போன்ற அடிப்படைத் திறன்களைக் கொண்டு, நுண்திறன்களை வளர்த்துக் கொண்டு விடும் பண்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. ஆகவே, ஒருமித்த அமைப்புகள் திறன்களைக் கொண்டு, பயிற்சித் திட்டங்களை உருவாக்கி, குறைந்த முயற்சிகளில், சீரிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் அரிய தன்மைகளை ஏற்படுத்திக் கற்றுத்தர முடியும் என்பதையும் ஆசிரியர்கள் நிரூபித்தாக வேண்டும்.

விளையாட்டுக் கொள்கைகள் (Theories of play)

விளையாட்டு உணர்வுகள் என்பது பிறப்பிருந்தே தொடர்வன. விளையாட்டு என்பது உடலியக்கச் செயல்களின் மூலமாக விளைவன.இயற்கையான, சுதந்திரமான, தன்னியக்கச் செயல்களே, விளையாட்டுக்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.