பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
219
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மிருகங்கள் விளையாடுகின்றன. அதுபோலவே மனிதர்களும் விளையாடுகிறார்கள். அவர்கள் ஏன் விளையாடுகிறார்கள் என்றால், தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அதிமுக்கியமான சந்தர்ப்பங்களை சந்திக்கத் தங்களை தயார் செய்து கொண்டு ஆயத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றார்கள் என்பது தான் குரூஸின் கொள்கையாகும்.

அவரது கொள்கையைப் பின்பற்றி T.P. நன் என்பவர் கூறுகின்றார். விளையாட்டு என்பது இயற்கையின் கண்டுபிடிப்பு. மனிதர்கள் தங்கள் தேகத்தில் உள்ள மிகுதியான சக்தியை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், வீணாக்கிவிடுவதற்காக, விளையாட்டு அமையவில்லை. மாறாக, சக்தியை செலவழித்து, தங்கள் எதிர்கால வாழ்வுக்காகத் தங்களை தயார் செய்து கொள்ளவே விளையாடுகின்றார்கள்.

இந்தக் கொள்கையின் இனிய சாராம்சம் என்னவென்றால், வயது வந்தபிறகு வாழ்க்கையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை இளஞ்சிறார்கள் விளையாடிக் கற்றுக் கொள்கின்றார்கள். அதாவது எதிர்கால புதிர்நிறைந்த வாழ்க்கையை வெற்றிகரமாக, சந்திக்க இப்பொழுதே அவர்கள் ஆயத்தமாகி விடுகிறார்கள்.

குழந்தைகள் பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடுகின்றனர். வீட்டிலே கிடைக்கின்ற பொருள்களை வைத்துக் கொண்டு தம் வசதிக்கேற்ப விளையாடுகின்றனர்.அவர்கள் விளையாட்டுக்களில் அப்பா அம்மா விளையாட்டு; ஆசிரியர், போலிஸ்காரர், திருடன், கணவன் மனைவி கடைக்காரர் இப்படிப்பட்ட பாத்திரப்