பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

221



3. பொழுதுபோக்குக் கொள்கை (Recreational Thery)

இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் கேம்ஸ்பிரபு மற்றும் G.W.T. பேட்ரிக் ஆவார்கள்.

இவர்கள் கொள்கையானது, “விளையாட்டு என்பது புதிய சக்தியை உற்பத்திசெய்கிறது”என்பதுதான்.

தேகத்தின் மிகுதியான சக்தியை விளையாட்டு செலவழிக்கவில்லை. அதற்கும் மாறாக, விளையாட்டு சக்தியை உற்பத்தி செய்கிறது. களைப்பை அகற்றுகிறது. கடினமான வேலைக்குப் பிறகு, விளையாட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு பொழுதைப் போக்கி, புத்துணர்ச்சியை அளிக்கிறது.

அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் மந்த சூழ்நிலையை, எரிச்சல் நிலையை விலக்கி, ஒரு சுவையான, சுகமான மாற்றத்தை விளையாட்டு ஏற்படுத்துகிறது என்கிறது பொழுதுபோக்குக் கொள்கை.

நாம் வாழ்வது நவீன காலம். நாகரிகக் காலம். நுணுக்கமான விரயங்கள் அதிகம். அதற்கு அதிகக் கவனம் தேவைப்படுகிறது.அதனால் நுண்ணிய புலன்கள் எல்லாம் அதிகமாக உழைத்து, விரைவில் களைத்துப் போகின்றன. அப்படிப்பட்ட களைத்த அவயவங்களின் அசதியைப் போக்கி, ஆனந்தத்தை விளையாட்டுக்கள் ஊட்டுகின்றன.

பொழுதுபோக்கு என்பது உடலுக்கு உள்ளத்திற்கும் அடிப்படையான தேவையாகும். ஆகவே விளையாட்டு என்பது ஒய்வையும் உல்லாசப் பொழுது போக்கையும்