பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

225


மாக செயல்பட்டு உருவாக்கி மகிழும் உணர்வுகள், தம்மை தரணியில் உயர்த்திக் கொள்ளவேண்டும் என்று தலை தூக்கி நிற்கிற சுய மதிப்பு உணர்வுகள், பிறருடன் போட்டியிட விரும்புகிற உணர்வுகள் எல்லாம் விளையாட்டுக்களிடையே புகுந்து விழிப்புணர்ச்சியும் வேகமும் பெற்றுக்கொள்கின்றன. சிறப்புப் பயிற்சிகளைப் பெறுகின்றன.

இப்படி தனது சமூக உளவியல், என்ற நூலில் பேராசிரியர் கூறுகின்றார். என்றாலும், அவர் கூறியது போல, பல வகையான விளையாட்டுக்கள் எல்லாம், போட்டிக்காகவும், விரோதம் காரணமாகவும் விளைந்திருப்பதாக விளக்கம் கூறியது சரியல்ல. விளையாட்டு எல்லாம் சாதாரணமானவைகள் தாமே என்று மறுத்துரைப்போரும் உண்டு.

6. உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கை (Cathartic Theory)

இந்தக் கொள்கைக்குத் தந்தையாக விளங்குபவர் அரிஸ்டாட்டில் ஆவார். இவரது கொள்கையானது, விளையாட்டுச் செயல்கள்யாவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இயல்புகளைக் கொண்டவை. அவையே இயற்கையானவை என்று விளக்கம் கூறுகிறது.

வாழ்க்கையில் விளைகின்ற வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் மனிதர்களை வேதனைக்குள்ளாக்குகின்றன. கலக்கம், கண்ணீர், சோதனை எல்லாம், மனிதரது இதயத்தை வேதனைப்படுத்துகின்றன. ஏதாவது துன்பம் கலந்த நாடகங்களைப்பர்க்கும்போது அந்த வேதனைகள் வடிந்து வெளியேற வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.